மீசாலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எமது அடுத்த வீட்டின் வேலைப்பாடுகள்.

விரைவில் விற்பனைக்கு தயாராக உள்ள மீசாலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்எமது அடுத்த வீட்டின் வேலைப்பாடுகள். இடம்  –  மடத்தடி 1ஆம் ஒழுங்கை இடதுபக்க 1ஆம் ஒழுங்கை , மீசாலை.

எமது இரண்டாவது வீட்டின் வேலைப்பாடுகள்.

தூண் மறறும் சீமெந்து தட்டு மூலம் உடனடி முறையில் தயாரிக்கப்பட்ட எமது இரண்டாவது வீட்டின் வேலைப்பாடுகள். இடம்: No 19, புலுட்‌டயன் பிள்ளையார் கோவில் வீதி, கல்வயல், சாவகச்சேரி. 32 அடி x 30 அடி

மூன்றாவது வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா

இன்றைய தினம் (18. 03. 2022) எமது மூன்றாவது வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தூண் மறறும் சீமெந்து தட்டு மூலம் உடனடி முறையில் தயாரிக்கப்படும் மூன்றாவது வீடு No 17/4, புலுட்‌டயன் பிள்ளையார் கோவில் வீதி, கல்வயல், சாவகச்சேரி. 32 அடி x 31 அடி  

ஆயிலடிப் பிள்ளையார் அறக்கொடை நிறுவனத்தால் ஒரு பரப்பு காணி

கல்வயலில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு ஆயிலடிப் பிள்ளையார் அறக்கொடை நிறுவனத்தால் ஒரு பரப்பு காணி இன்று (14.02.2022) வழங்கி வைக்கப்பட்ட்து. கல்வயல் வேதவனப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில் அமைந்திருக்கும் இக் காணியை லண்டனில் வசிக்கும் திரு நடராஜ முரளிதரன் அவர்களின் நிதி உதவியால் கொள்வனவுசெய்யபட்டு அவரால் தெரிவுசெய்யப்படட மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

அற நூல்கள் என்பன மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

23.01.2022 அன்று நடந்த அறநெறிப்‌பாடசாலையில் சமய பாடப்‌ புத்தகங்கள், அற நூல்கள் என்பன மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

குடும்பம் ஒன்றிற்கு 20 000 ரூபா பெறுமதியான மின் இணைப்பு பொருட்கள்

கல்வயலை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு 20 000 ரூபா பெறுமதியான மின் இணைப்பு பொருட்கள் அறக்கொடையாக வழங்கப்‌பட்டது.

யாழில் முதன் முறையாக உடனடி வீடு

யாழில் முதன் முறையாக உடனடி வீடு (precast house) நிரந்தர வீடு அமைத்து மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது எமது நிறுவனம். கல்வயலில் அமைந்திருக்கும் இந்த வீட்டை திரு திருமதி சரவணபவாநந்தஷர்மா அவர்கள் கொள்வனவு செய்து நேற்றைய தினம் குடிபுகுந்தார்கள்.